திரு. எஸ்.பி பர்வத்ராஜ் ஆறுமுகம், பி.ஏ., பி.எல்.,
குடும்ப விபரம்:-
எனது பெற்றோர் திரு. செ.பிச்சைக்காரன், தலைமை ஆசிரியர்(ஓய்வு), திருமதி. சரோஜா. உடன் பிறந்தோர் 4 மூத்த சகோதரிகள், 1 இளைய சகோதரி, 1 மூத்த சகோதரன்.
மனைவி திருமதி. க.பா.நந்து, இளநிலை பொறியாளர்.
தொழில்சார் அனுபவம்:- 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பின் கீழ் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்து, 22.09.2010 தேதியில் வழக்கறிஞராகச் பதிவு செய்தும், அது முதல் சிவில் நீதிபதியாக பணியில் சேரும் வரை, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி செய்தேன். நான் 19.07.2019ம் தேதியில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்,டி விரைவு நீதிமன்றத்தில் (குற்றவியல் நடுவர் நிலை) நீதித்துறை நடுவராக, சிவில் நீதிபதி (ஜூனியர் டிவிசன்) பணியில் சேர்ந்தேன். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவில் நீதிபதியாக (ஜூனியர் டிவிசன்) பயிற்சி பெற்றேன். பின்பு மேற்படி நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவராக 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன். பின்னர் நான் வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவராக மாற்றப்பட்டு 06.05.2022ம் தேதியில் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறேன்.