மூடுக

    திருமதி. அ. பல்கீஸ்., பி.எல்.,

    திருமதி. அ. பல்கீஸ்., பி.எல்., முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்.
    • பதவி: முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்.

    திருமதி.அ.பல்கீஸ், முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் 20.03.1967 அன்று பிறந்தார். பல்வேறு பள்ளிகளில் படித்து சென்னையிலுள்ள SIET மேல்நிலைப் பள்ளியில் தனது +2 வகுப்பை நிறைவு செய்தார். அதன் பின்னர் திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று, 1992 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். சிவில் நீதிபதி ஜூனியர் பிரிவு/ குற்றவியல் நீதித்துறை நடுவர் முதல் வகுப்பு ஆக 1998 ல் பதவியேற்கும் வரை திருச்சிராப்பள்ளியிலுள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றினார். இவரது தந்தை காலஞ்சென்ற திரு.எம்.எம்.அப்துல் கபூர், பி.ஏ., பி.எல்., அவர்கள் சார்பு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் மெட்ராஸ் பல்கலைக்கழகம், கிறிஸ்டியன் காலேஜில் B.A.(Hon’s) Economics-ல் 1943 ஆம் ஆண்டு டெர்ஸோ (Terzo) பரிசு வென்றவர். தாயார் காலஞ்சென்ற திருமதி.எம்.ஏ.ரமீஸா பீ அவர்கள் இல்லத்தரசி ஆவார். இவரது கணவர் வளைகுடா நாட்டில் பணிபுரிந்து தற்போது மூத்த ஆலோசகராக ஹெச்.டி.எப்.சி லைப் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸில் பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகள் கணினி பொறியாளர். இவரது கணவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
    சிவில் நீதிபதி ஜூனியர் பிரிவு/ குற்றவியல் நீதித்துறை நடுவர் முதல் வகுப்பு ஆக 1998 ல் தேர்வாகி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1 ஆக கோயம்புத்தூரில் பணியில் சேர்ந்தார்.
    2009 ஆம் வருடம் சார்பு நீதிபதியாக பதவி உயர்வு பெற்று கோபிசெட்டிபாளையம், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். 2015 ஆம் வருடம் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று மதுரையில் உள்ள தென் மாவட்டங்களுக்கான இனக்கலவர வழக்குகள் நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகவும் அதன்பின் சென்னையில் தமிழ்நாடு வக்ஃப் தீர்ப்பாயத்தின் தலைவராக ஏப்ரல் 2021 வரை பணியாற்றினார். அதன் பின்னர் கூடுதல் மாவட்ட நீதிபதி எண்.III ஆக சிதம்பரத்தில் பணிபுரிந்து 27.08.2021 முதல் தற்போது வரை முதன்மை மாவட்ட நீதிபதியாக பெரம்பலூரில் பணியாற்றி வருகின்றார்.