மூடுக

    திரு. அ. தனசேகரன்., எம்.எ., எம்.பி.எ., எம்.எல்.,

    திரு. அ. தனசேகரன்., எம்.எ., எம்.பி.எ., எம்.எல்., நீதிபதி, குடும்பநல நீதிமன்றம், பெரம்பலூர்.
    • பதவி: நீதிபதி, குடும்பநல நீதிமன்றம், பெரம்பலூர்.

    அ. தனசேகரன், M.A., M.B.A., M.L., 11.04.1965 அன்று பிறந்தார். தந்தை (லேட்).திரு.K.அருணகிரி, வியாபாரம் செய்து வந்தார் மற்றும் தாயார் (லேட்).அ.விமலாதேவி, இல்லத்தரசி, ஒரு தங்கை மற்றும் தாசில்தாராக பணிபுரிந்து வரும் ஒரு தம்பியும் உள்ளனர்.
    மனைவி திருமதி.த.குமுதவள்ளி, B.Sc., B.Ed., இல்லத்தரசி. மகள் த.ஜெயஸ்ரீ, B.Tech. (C.S.) முடித்துவிட்டு, தற்சமயம், ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் மற்றும் மகன் த.அருண்குமார் B.Tech. (C.S.) முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    12.04.1989 அன்று வழக்குரைஞராக பதிவு செய்து கொண்டார் மற்றும் நாமக்கல் வழக்குரைஞர் லேட்.திரு.P.தியாகராஜன் என்பவரது அலுவலகத்தில் உதவி வழக்குரைஞராக பணியில் சேர்ந்து, சுமார் 6 வருடங்கள் பணிபுரிந்தார். தனித்த பயிற்சியை 1995 மே மாதத்திலிருந்து துவங்கி, 2001ஆம் ஆண்டு உரிமையியல் நீதிபதியாக தேர்வாகும் வரை நாமக்கலில் வழக்குரைஞராக பணிபுரிந்து வந்தார். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி, யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் கம்பெனி, கூட்டுறவு வீடுகட்டும் சங்கங்கள் மற்றும் நாமக்கல் நகராட்சியின் வழக்குரைஞராகவும் பணிபுரிந்துள்ளார்.
    10.12.2001 அன்று லால்குடி, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவராக நீதித்துறை பணியில் சேர்ந்தார் மற்றும் ஆம்பூர், பாண்டிச்சேரி, குளித்தலை, திருவையாறு ஆகிய பல்வேறு நீதிமன்றங்களில் உரிமையியல் நீதிபதி (இளநிலை பிரிவு) / நீதித்துறை நடுவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013ஆம் வருடம் பதவி உயர்வு பெற்று தஞ்சாவூரில் முதன்மை சார்பு நீதிபதியாகவும் மற்றும் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய பல்வேறு நீதிமன்றங்களில் பணிபுரிந்துள்ளார். 2019ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று மதுரையில் 3ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்தும் மற்றும் நீதிபதி, குடும்பநல நீதிமன்றம் பெரம்பலூரில் 30.08.2020 முதல் தற்போது வரை பணிபுரிந்து வருகிறார்.