மூடுக

    திரு. ஆர். ராஜாமகேஷ்வர், எம்.எஸ்சி., பி.எல்.,

    திரு. ஆர். ராஜமகேஷ்வர், எம்.எஸ்சி., பி.எல்.,	முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி, பெரம்பலூர்.
    • பதவி: முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி, பெரம்பலூர்.

    திரு. ரா. ராஜாமகேஷ்வர், எம்.எஸ்.சி., பி.எல்., தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் 07.03.1974 அன்று முன்னால் படைவீரரான திரு. ம. ராமசாமி மற்றும் இல்லத்தரசி திருமதி. ச. முத்துநாகலெட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த பின் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல் அறிவியல் பள்ளியில் முதுகலை அறிவியல் பட்டமும், மதுரை அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டத்தில் பட்டமும் பெற்றார். 13.10.2000-ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் குழுமத்தில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு, பெரியகுளம் மற்றும் தேனியில் உள்ள விசாரணை நீதிமன்றங்களில் மூத்த வழக்கறிஞர் காலஞ்சென்ற திரு.அ. ராமநாதன் அவர்களிடம் பயிற்சி பெற்றார். தமிழ்நாடு மாநில நீதித்துறை பணித் தேர்வின் மூலம் இளநிலை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 12.10.2012-ல் சென்னை, எழும்பூர் விரைவு நீதிமன்றம் (நடுவர்நிலை) எண்.2-ல் பெருநகர நடுவராக பணிபுரிந்தார். பின்னர் மானாமதுரை முதன்மை மாவட்ட உரிமையியல் நடுவராகவும், கூடுதல் மாவட்ட உரிமையியல் நடுவர் மற்றும் நீதித்துறை நடுவராகவும் பணிபுரிந்து, காட்பாடி மாவட்ட உரிமையியல் நடுவராகவும் பணிபுரிந்து தற்போது பெரம்பலூர் முதன்மை மாவட்ட உரிமையியல் நடுவராக பணியாற்றி வருகிறார்.